முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் 9 இடங்களில் கண்காணிப்பு கேமரா-வனவிலங்கு நடமாட்டம், வனக்குற்றங்களை தடுக்க நடவடிக்கை
2022-01-28@ 13:58:38

கூடலூர் : உயரமான இரும்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக பொருத்தப்பட்டுள்ள இந்த 9 கேமராக்கள் மூலம் 360 டிகிரி கோணத்தில் வனப்பகுதிகளை கண்காணிக்க முடியும். அனைத்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் பதிவுகளை நேரடியாக தெப்பக்காட்டில் உள்ள பேஸ்- 4 கண்காணிப்பு மையத்தில் இருந்தவாறு பணியாளர்கள் மூலம் கண்காணிக்கும் வகையிலும், கண்காணிப்பு மையத்தில் இருந்தவாறு கேமராவை பல்வேறு கோணங்களில் திருப்பி வனப் பகுதிகளை கண்காணிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் அன்னிய நபர்கள் நடமாட்டம், வனவிலங்குகளின் நடமாட்டம், காட்டுத்தீ உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்காணிக்கும் வகையில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளின் எல்லைப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீயையும் கண்காணித்து உடனடியாக காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்து வனக் குற்றங்களில் ஈடுபடுவோரையும் கண்கானிக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
சங்க பொது செயலாளர் கைது மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல்: திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு
நாய்களிடமிருந்து மயிலை காப்பாற்றிய வாலிபர்: பொதுமக்கள் பாராட்டு
ஒதப்பை கிராமத்தில் ரூ.22.50 கோடியில் விறுவிறுப்பாக நடைபெறும் உயர்மட்ட பால பணிகள்: விரைவில் திறக்க ஏற்பாடு
ஆவடி சாலையில் மின்விளக்குகள் சீரமைப்பு
சீத்தஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் 4 வருடங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு: சீரமைக்க கோரிக்கை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!