தமிழகத்தில் புதிதாக 28,515 பேருக்கு கொரோனா தொற்று
2022-01-28@ 00:56:18

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 28 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 53 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு கடந்த வாரம் 30 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்த போதும் தொற்று பரவலின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து மூன்றாவது நாளாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து நேற்று 28,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப்போன்று சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,46,798 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,13,534 ஆக உள்ளது. நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 28,620 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி இதுவரை 30 லட்சத்து ஆயிரத்து 805 பேர் குணமடைந்துள்ளனர். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 53 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 31 பேரும் நேற்று உயிரிழந்தனர்.இதையடுத்து மொத்தம் 37,412பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் நேற்று 5,591 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கோவையில் 3,629, செங்கல்பட்டு 1,696, ஈரோடு 1,314, கன்னியாகுமரி 970, சேலம் 1,431, திருப்பூர் 1,877 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,743 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ2,25,000 அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை
மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு; உடனடியாக தேர்வு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
தனியார் ஓட்டலில் கெட்டுப் போன இறால், மட்டன், மீன், சிக்கன் பறிமுதல்: அண்ணாநகரில் பரபரப்பு
துரைப்பாக்கம், ஒக்கியம்பேட்டையில் ரூ257 கோடியில் பாதாள சாக்கடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வேளச்சேரியில் மின்சாரம் பாய்ந்து; தூய்மை பணியாளர் பலி!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!