மது பாட்டில்களை பதுக்கி விற்ற பெண் காவலரின் கணவர் கைது
2022-01-28@ 00:43:58

ஆவடி: குடியரசு தினத்தன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை பயன்படுத்தி ஆவடி, காமராஜ் நகர், 3வது தெருவில் உள்ள டாஸ்மாக் பாரில், மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்வதாக, சென்னையில் உள்ள மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, பாரில் 2 ஊழியர்கள் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு நுழைந்து சோதனை நடத்தியபோது, 30 அட்டை பெட்டிகளில் 1,282 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். அதனை விற்பனை செய்த 2 பேரை பிடித்து அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், எழும்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த சிக்கந்தர் (33), கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், குரு வினாயக பள்ளியை சேர்ந்த பெருமாள் (43) என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், சிக்கந்தர் மனைவி ஜெகமத்பானு, அண்ணா சாலையில் மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
புல்லட் வாங்க மனைவியின் 17 சவரனை திருடிய புதுமாப்பிள்ளை: கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலம்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது: 600 மாத்திரைகள் 100 ஊசி பறிமுதல்
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; அதிகாலை எழுந்து சாணி தெளிக்க சொன்ன மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்: ஆண் நண்பருடன் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
கோயில் உண்டியல் உடைப்பு
ஆட்டோவில் வந்து கைவரிசை; மாஸ்க் அணிந்து திருட்டு அண்ணன், தம்பி கைது
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்