குளச்சலில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத உடும்பு சுறா: 5 மணிநேரம் போராடி கரை சேர்த்தனர்
2022-01-27@ 17:03:11

குளச்சல்: குளச்சல் மரமடியை சேர்ந்தவர் மெல்பின்(40).இவர் சொந்தமாக பைபர் படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்.நேற்று இவர் வழக்கம்போல் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து படகில் மீன் பிடிக்க சென்றார். உடன் 2 மீனவர்களும் சென்றனர். அவர்கள் கடலில் வலையை வீசிய சிறிது நேரத்தில் ராட்சத மீன் ஒன்று படகு மீது மோதியது. இதில் படகு குலுங்கியது. மறுகணம் படகில் மோதிய ராட்சத மீன் தானாகவே மீனவர் வலையில் சிக்கி கொண்டது. உடனே மீனவர்கள் வலையை இழுத்து படகை கரை நோக்கி செலுத்தினர். மீன் வலை மிகவும் கனமாக இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கரையை நோக்கி வரும்போது வலை அறுந்தது. அப்போதுதான் வலையில் சிக்கியது ராட்சத உடும்பு சுறா என மீனவர்களுக்கு தெரிந்தது. மீனை தப்பவிட்டால் படகை கவிழ்த்து விடும். செய்வதறியாது தவித்த மீனவர்கள் கயிற்றால் கட்டி சுமார் 5 மணிநேரம் போராடி குளச்சல் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். பின்னர் விசைப்படகின் கப்பி மூலம் மீனை கரை சேர்த்தனர். அது 12 அடி நீளமும், 1500 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. கரை சேர்க்கப்பட்ட உடும்பு சுறாவை பொதுமக்கள் வேடிக்கையுடன் கண்டு களித்தனர்.
சிறுவர்கள் அதன் மீது ஏறி உட்கார்ந்து சவாரி செல்வது போல் விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் மீன் ஏலமிடப்பட்டது. அது ₹.40 ஆயிரம் விலை போனது. ஆனால் சுறாவை பிடித்த வலை முற்றிலும் சேதமானது. அவருக்கு ₹.1லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் கவலையடைந்தனர்.
மேலும் செய்திகள்
சிறுசேரியில் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் மென்பொருள் பூங்காவில் ரூ.35 கோடியில் வணிக வளாகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.16.12 கோடியில் 872 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கோவை, அருப்புக்கோட்டையில் வருமானவரித்துறை அதிரடி
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோலாகலம்: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
கடந்த அதிமுக ஆட்சியில் 2015ல் கட்டப்பட்டது அரசுப்பள்ளி மேற்கூரை விழுந்து 3 மாணவர்கள், ஆசிரியர் காயம்: தண்டராம்பட்டு அருகே பரபரப்பு
பெற்றோருக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை: ஓசூர் போலீசார் விசாரணை
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!