மீனவர்கள் விடுதலை மகிழ்ச்சி படகுகளும் மீட்கப்பட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
2022-01-27@ 01:14:25

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டர் கூறியுள்ளதாவது: இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நடவடிக்கை மேற்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நன்றியும், பாராட்டுகளும். மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் படகுகளும், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் விடுவிக்கப்படவில்லை. இலங்கை அரசிடம் பேசி அந்நாட்டு அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் ஒன்றிய அரசு மீட்க வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுகளை மீண்டும் தொடங்கவும், இந்தியா - இலங்கை ஐந்தாவது கூட்டு பணிக்குழு கூட்டத்தை விரைந்து நடத்தவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ஆதம்பாக்கத்தில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக மூத்த முன்னோடிகள் 1600 பேருக்கு பொற்கிழி: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்
மதச்சண்டையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் பாஜ: டி.ராஜா குற்றச்சாட்டு
தனக்கே தெரியாத சமூகநீதி பற்றி திமுகவிற்கு பாடம் எடுப்பதா? முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு எம்.பி கண்டனம்
சொல்லிட்டாங்க...
ராகுல் காந்தியை தொடர்புபடுத்தி பாஜ போலி வீடியோ: காங்கிரஸ் எச்சரிக்கை
நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்: திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்த பின் ஓபிஎஸ் பேட்டி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்