செம்பரம்பாக்கம் ஏரியில் குளித்த கல்லூரி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி
2022-01-26@ 00:43:44

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த வடக்கு மலையம்பாக்கம், குமரன் நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார் (18). போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் முதலாண்டு படித்துவந்தார். நேற்று முன்தினம் நரேஷ்குமார், தனது நண்பர் அதே பகுதியை சேர்ந்த முத்துபிரபு என்பவருடன், செம்பரம்பாக்கம் ஏரிக்கு பைக்கில் சென்றார். அங்கு, 5ம் கண் மதகு அருகே இருவரும் தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற நரேஷ்குமார், தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த நண்பர், அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. தகவலறிந்து பூந்தமல்லிதீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மூழ்கிய நரேஷ்குமாரை, நேற்று காலை சடலமாக மீட்டனர். புகாரின்படி, குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
அதிமுக பொதுக்குழுவில் பெரும் தொகை பட்டுவாடா: எடப்பாடிக்கு மெஜாரிட்டி கிடைத்த ரகசியத்தை அம்பலபடுத்தினார் புதுச்சேரி மாநில செயலாளர்
கைதி மாயம்: சேலம் சிறை அதிகாரியிடம் 3 மணி நேரம் விசாரணை
கூட்டுறவுத்துறையில் அதிமுக ஆட்சியில் ரூ780 கோடி முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
ரூ700 கோடி நில மோசடி வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படை
நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் தவித்த இலங்கை டாக்டருக்கு உதவிய திருச்செந்தூர் போலீஸ்காரர்: பாராட்டு குவிகிறது
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் காத்திருப்பு போராட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்