கூட்டத்தை தவிர்க்கும் வகையில் குடியரசு தினவிழாவை காண மாணவர்கள், மூத்த குடிமக்கள் நேரில் வருவதை தவிர்க்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு
2022-01-26@ 00:02:24

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, 26ம் தேதி(நாளை) காலை 8 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர். கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைகாட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி, ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குடியரசுதின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில், கண்டு-கேட்டு மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Republic Day Students Senior Citizens Government of Tamil Nadu குடியரசு தினவிழா மாணவர்கள் மூத்த குடிமக்கள் தமிழக அரசுமேலும் செய்திகள்
காதல் திருமணம் செய்த 20 நாட்களில் ஏரியில் மூழ்கி புது மாப்பிள்ளை பலி: நண்பர்களிடம் விசாரண
பெண்ணிடம் நெருக்கமாக இருந்த வீடியோவை கணவருக்கு அனுப்பிய வாலிபர் பிடிபட்டார்
வாடிக்கையாளர் புகார் எதிரொலி கெட்டுப்ேபான உணவு விற்ற பிரபல ரெஸ்டாரண்டுக்கு சீல்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி
சென்னை விமான நிலையத்தில் ஏமன் நாட்டுக்கு செல்ல முயன்ற பயணி கைது
கும்மிடிப்பூண்டி அருகே பாஜ பிரமுகரின் கார் தீ வைத்து எரிப்பு: மர்ம நபர்களுக்கு வலை
கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வாலிபர் போலீசில் சரண்: என் தாயை ஆபாசமாக திட்டியதால் கற்களால் தாக்கினேன் என வாக்கு மூலம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!