SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி

2022-01-26@ 00:02:20

சென்னை: சேத்துப்பட்டு 16வது அவென்யூவில் பிரபல வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு, நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் முகக்கவசம், கையுறை அணிந்து கொண்டு பணம் எடுப்பது போல் நடித்து, ஏடிஎம் மெஷினை இரும்பு ராடால் உடைத்துள்ளனர். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, ஐதராபாத்தில் உள்ள ஏடிஎம் மையத்தின் தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலித்துள்ளது. உடனே இதுபற்றி ஐதராபாத்தில் உள்ள வங்கி கட்டுப்பாட்டு அதிகாரிகள், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். ஏடிஎம் மையம் உள்ளே சென்று பார்த்தபோது, மெஷினை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது தெரியவந்தது. ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்