சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடிய காட்டேரி பூங்கா
2022-01-25@ 12:40:45

குன்னூர் : ஒமிக்ரான் மற்றும் கொரோனா அச்சம் காரணமாக குன்னூரில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று காரணமாக தமிழக அரசு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகிறது. பொது மக்கள் கூடும் இடங்கள், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் முக கவசங்கள் அணிவது கிருமி நாசினி பயண்படுத்தவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சுற்றுலாதலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முகக்கவசங்கள் அணிய கட்டாயப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா,டால்ஃபின் நோஸ் மற்றும் லேம்ஸ் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள வாகனஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்