SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை ஏற்படுத்தி பாடங்கள் கற்பிக்கப்படும் : தமிழக அரசு

2022-01-25@ 10:52:39

சென்னை : போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி மற்றும் இதர போட்டி தேர்வுகளுக்கு தயாராகுவோருக்காக கல்வி தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில்+, 'ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணித் தேர்வுகள், இந்திய பொறியியல் பணி  தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள் , staff selection commission நடத்தும் போட்டித் தேர்வுகள், வங்கித் தேர்வுகள்,  ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் என பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுக்கு என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் தனி அலைவரிசை ஏற்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்படும். இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்