குளத்தில் குதித்து வாலிபர் தற்கொலை
2022-01-25@ 02:31:18

திருவள்ளூர்: திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் நேற்று காலை வாலிபர் சடலம் மிதந்தப்பதாக திருவள்ளூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் இளங்கோவன், தீயணைப்பு வீரர் ஞானவேல் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று வாலிபரின் சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், திருவள்ளூர் வீரா நகர் தகனிக்கோட்டை தெருவை சேர்ந்த யுவராஜ்(32) என்பதும், திருவள்ளூரில் உள்ள காஸ் கம்பெனியில் உதவியாளராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி நித்தியா என்ற மனைவியும், 9 வயதில் தரணீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கம் உடைய இவர் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நித்யா கணவர் மீது கோபித்துக் கொண்டு தன் மகனுடன் தனியாக சென்றுவிட்டார். மனைவி மற்றும் மகன் தன்னுடன் இல்லை என்ற ஏக்கத்தில் யுவராஜ் அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார். அவர் தனது மனைவி மகன் பிரிந்து சென்ற ஏக்கத்தில் கோயில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் செய்திகள்
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ரூ.38 லட்சத்தில் துணை வேளாண்மை மைய கட்டிடம்
காஞ்சிபுரம் மாவட்ட இடைத்தேர்தல் மது கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
வாரணவாசி ஊராட்சியில் அகற்றியதற்கு பதிலாக புதிதாக சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை
சிறுசேரியில் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் மென்பொருள் பூங்காவில் ரூ.35 கோடியில் வணிக வளாகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.16.12 கோடியில் 872 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கோவை, அருப்புக்கோட்டையில் வருமானவரித்துறை அதிரடி
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!