சாலை பாதுகாப்பு வார துவக்க விழா
2022-01-25@ 02:20:15

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில், தமிழ்நாடு அனைத்து எம்சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு வார துவக்க விழா நேற்று நடந்தது. இதில் 24மணி நேர மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம், பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு தார்பாய்கள், இருச்சகர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம், இரவு நேரங்களில் வாகனங்கள் முன்னால் செல்வதை காட்டும் ஒளிரும் பட்டைகள் உள்பட வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் உபகரணங்களை மணல் லாரி உரிமையாளர்களின் சங்க மாநில தலைவர் யுவராஜ் கொண்டு வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
கனரக வாகனங்களில் அதிக பாரத்தை ஏற்றி செல்வதை தடுத்தால், விபத்தை தடுக்க முடியும். அதையும் சுங்கச்சாவடி நிர்வாகம்தான் செய்யமுடியும். இந்த சாலை பாதுகாப்பு வார விழாவில் 24மணி நேர மருத்துவ உதவி குழு இயக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டதொடரில் 1 யூனிட் மணல் ₹1000க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதை எங்களது கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
மேலும் செய்திகள்
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: பொதுமக்கள் தவிப்பு
நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டெடுப்பு
திருச்சி பொதுப்பணித்துறை ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.31.26 லட்சம் பறிமுதல்
கோவை- மஞ்சூர் சாலையில் அரசு பஸ், தனியார் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை கூட்டம்: பயணிகள் பீதி
திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் சேலம் டூரிஸ்ட் நிறுவனத்தில் ஆந்திர போலீசார் விசாரணை
புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழிலை மேம்படுத்த 11 பேர் குழு: ஒன்றிய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் நியமனம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!