கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல்
2022-01-25@ 02:11:32

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம பொருளாதார முக்கிய பங்கு வகிக்கும் நாட்டு கோழிகள் மற்றும் பிறவகை கோழிகளுக்கு கோடை காலங்களில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோய் பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
இதனால், இந்த நோயை கட்டுப்படுத்த, ஒவ்வொரு சனிக்கிழமையும், அரசு கால்நடை மருந்தகங்களிலும், 15 நாட்களுக்கு ஒருமுறை அரசு மருத்துவ கிளை நிலையத்திலும், கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமிலும், கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம், கிராமம்தோறும் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் பிப்ரவரி 1 முதல் 14ம் தேதி வரை 3 லட்சம் கோழிகளுக்கு இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் கோழிகளை வளர்க்கும் அனைவரும், அந்த முகாமில் கலந்து கொண்டு, தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு, வெள்ளை கழிச்சலால் ஏற்படும் இறப்பை தவிர்க்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திருக்கழுக்குன்றத்தில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மறைவு
மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது
செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சோமங்கலம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாப பலி
கேளம்பாக்கம் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் தீ விபத்து ரூ. 20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!