குடியரசு தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் முழு சீருடை அணிவகுப்பு ஒத்திகை
2022-01-25@ 01:33:16

ஸ்ரீநகர்: குடியரசு தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் முழு சீருடை அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடந்தது. நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் முழு சீருடை அணிவகுப்பு நேற்று நடந்தது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஸ்ரீநகரின் ஷெரீ- இ- காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் ஒத்திகை நடந்தது. பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த ஒத்திகையில் போலீஸ் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காஷ்மீர் ஐஜி விஜயகுமார் கூறுகையில், ‘‘குடியரசு தின விழா எந்த ஒரு அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடைபெறுவதற்கு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக விரோத சக்திகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் வாகன சோதனைகளை நடத்தி வருகின்றனர். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் ஸ்ரீநகரின் பதட்டமான பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.
135 பேர் ஊடுருவ காத்திருப்பு: காஷ்மீர் பிஎஸ்எப் ஐஜி ராஜாபாபு சிங் கூறுகையில்,‘‘பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவுவதற்கு 135 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர் என்ற ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ராணுவம் மற்றும் பிஎஸ்எப் படையினருக்கு இடையே ஒத்துழைப்பு சுமூகமாக உள்ளது. யாராவது இந்திய எல்லையை கடந்து உள்ளே புகுந்து, தாக்குதல் நடத்தினால் அவர்கள் சுட்டு கொல்லப்படுவார்கள்’’ என்றார்.
எல்லை கண்காணிப்பு: இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய எல்லை பாதுகாப்பு படை ஐஜி டி.கே.பூரா,‘‘ குடியரசுதினத்தன்று தேசத்துக்கு எதிரான சக்திகள் குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்யும் என தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்தியா- பாக். எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஆட்டோ மீது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியதில் 8 பேர் உடல் கருகி பலி
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..
'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
பில்கேட்சை சந்தித்த மகேஷ் பாபு
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;