கேபினட் ஒப்புதலுக்கு பிறகு கடன் வசூல் தீர்ப்பாயங்களில் நீதிபதி பணியிடம் நிரப்பப்படும்: ஒன்றிய அரசு ஐகோர்ட் கிளையில் தகவல்
2022-01-25@ 01:19:48

மதுரை: மதுரை கடன் வசூல் தீர்ப்பாய வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரையில் கடந்த 2007 முதல் கடன் வசூல் தீர்ப்பாயம் செயல்படுகிறது. இதன் கீழ் 10 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன. கடந்த 2008 முதல் பொறுப்பு நீதிபதியைக் கொண்டே இயங்குகிறது.
இதுவரை முழுநேர நீதிபதி நியமிக்கப்படவில்லை. இதனால் வழக்குகள் அதிகளவில் தேங்கியுள்ளன. வழக்குகளில் தீர்வு காண்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நீதிபதி மற்றும் அனைத்து காலியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, ஸ்ரீமதி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசுத் தரப்பில், நாடு முழுவதும் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்களில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கேபினட் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. விரைவில் நியமன பணிகள் முடியும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், நியமன நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளவும், பணிகள் பாதிப்பை தடுக்க கூடுதல் பொறுப்புடன் கூடிய பணிகளை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.
மேலும் செய்திகள்
மகன் தந்தைக்காற்றும் செயல்; பனை மரம் ஏறி வருவாய் ஈட்டி பாடம் கற்கும் கல்லூரி மாணவன்
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது; கார்த்தி சிதம்பரம்.
அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
ஆவடி அமமுக செயல்வீரர்கள் கூட்டம்; ஓபிஎஸ்சை ரகசியமாக சந்திக்க அவசியம் இல்லை.! டிடிவி.தினகரன் பேட்டி
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்; முத்தரசன் எச்சரிக்கை
மணப்பாறை நீதிமன்றத்தில் தொந்தரவு கொடுத்து வந்த குரங்குகள் கூண்டில் சிக்கின-பணியாளர்கள், பொதுமக்கள் நிம்மதி
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!