கடல் பசுக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை: காங்கிரஸ் எம்பி பாராட்டு
2022-01-25@ 00:12:37

சென்னை: கடல் பசுக்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா கடலில் 500 சதுர கி.மீ. பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: கடல் பசுக்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா பகுதியில் 500 சதுர கி.மீ பரப்பளவிற்கு பல்லுயிர் பாதுகாப்பு பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே ஒரே தாவர வகை கடல் பாலூட்டியான கடல் பசுக்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது இந்தியாவிலேயே முதல் கடல் பசு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இதன் மூலம் கடல் பசுக்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கடல் பசுக்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடல் பசு பாதுகாப்புக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை போல் மேலும் பல நடவடிக்கைகள் தேவை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Tags:
Sea cow to protect Government of Tamil Nadu Congress MP praise கடல் பசு பாதுகாக்க தமிழக அரசு காங்கிரஸ் எம்பி பாராட்டுமேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: நாமக்கல்லில் 3ம் தேதி நடக்கிறது
அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு சென்று விட்டு ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லாது
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்
ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுக்கள் பரிசீலனை; பாஜக கூட்டணி வேட்பாளர், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மனு ஏற்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்