பொம்மை குடோனில் பயங்கர தீ விபத்து
2022-01-24@ 08:11:21

புழல்: செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் செல்லியம்மன் நகர் பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொம்மை பொருட்கள் குடோன் உள்ளது. இங்கு, வடமாநிலங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடோனின் மேற்பகுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த குடோனில் இருந்து, கரும்புகை வெளிவந்தது. சிறிதுநேரத்தில், தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்த செங்குன்றம், மணலி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் சுமார் 30 தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, பத்து மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து, செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வடபெரும்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் குடோன்கள் உள்ளது. இவற்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, குடியிருப்பு பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத குடோன்கள் எப்படி செயல்படுகிறது? என்பது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கோவை, அருப்புக்கோட்டையில் வருமானவரித்துறை அதிரடி
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோலாகலம்: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
கடந்த அதிமுக ஆட்சியில் 2015ல் கட்டப்பட்டது அரசுப்பள்ளி மேற்கூரை விழுந்து 3 மாணவர்கள், ஆசிரியர் காயம்: தண்டராம்பட்டு அருகே பரபரப்பு
பெற்றோருக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை: ஓசூர் போலீசார் விசாரணை
கோவையில் ருசிகரம் துவக்கப்பள்ளியில் மாணவர் தேர்தல்
ஆர்டிஐயின் கீழ் ஆதீனங்கள் வராது: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!