10 ஆண்டுகளுக்கு பிறகு அம்மையார்குப்பத்தில் முழங்கியது சங்கு
2022-01-24@ 08:08:38

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் நெசவு கூடங்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் வேலை செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் நேர வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலி எழுப்பும் சங்கு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல வருடங்களுக்கு முன் சங்கு பழுதானதால் பயன்பாடின்றி இருந்தது. இந்நிலையில், ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் துணை தலைவர், வார்டு உறுப்பினர்களின் பெரும் முயற்சியால் மீண்டும் சங்கு சீர்செய்யப்பட்டு நேற்று துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் சங்கு ஒலிக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயந்தி சண்முகம் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நாகலிங்கம், மோகனாதன், ரவிக்குமார், லதா ராமசாமி, சரவணன், தேவி மணிமாறன், ஏகவள்ளி பழனி, மலர்விழி ஏகாம்பரம், விஜயன், சுப்பிரமணி, வெங்கடேசன், ஊராட்சி உதவியாளர் விஸ்வநாதன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்ட இடைத்தேர்தல் மது கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
வாரணவாசி ஊராட்சியில் அகற்றியதற்கு பதிலாக புதிதாக சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை
சிறுசேரியில் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் மென்பொருள் பூங்காவில் ரூ.35 கோடியில் வணிக வளாகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.16.12 கோடியில் 872 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கோவை, அருப்புக்கோட்டையில் வருமானவரித்துறை அதிரடி
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோலாகலம்: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!