இந்தாண்டு ராணுவ அணிவகுப்பில் புதுமை அந்த நாள் முதல் இந்த நாள் வரை... 70 ஆண்டு சீருடை, துப்பாக்கியுடன் வீறுநடை
2022-01-24@ 04:11:02

புதுடெல்லி: நாட்டின் 75வது குடியரசு தின விழா வரும் 26ம் தேதி டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் முப்படைகளின் அணிவகுப்பும் இடம் பெறுகிறது. இந்தாண்டு இதில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ராணுவத்தில் கடந்த 1950ம் ஆண்டு முதல் 72 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சீருடை மற்றும் ஆயுத மாற்றங்களை விளக்கும் வகையில், தனி அணிவகுப்பை ராணுவம் நடத்த உள்ளது. இதில், மொத்தம் 6 பிரிவுகள் இடம் பெற உள்ளன. இதில் இடம் பெறும் வீரர்கள் அணிந்து வரும் சீருடைய, துப்பாக்கி ரகம் பற்றி ராணுவ மேஜர் ஜெனரல் அலோக் கக்கர் கூறிய விவரம் வருமாறு:
* முதலில் வரும் ராஜ்புத் படைப்பிரிவு வீரர்கள், 1950ம் ஆண்டில் ராணுவ வீரர்கள் அணிந்திருந்த சீருடையுடன், அப்போது பயன்பாட்டில் இருந்த 303 ரக துப்பாக்கிகளை ஏந்தி வருவார்கள்.
* 2வதாக வரும் அசாம் காலாட்படை வீரர்கள், 1960ம் ஆண்டைய சீருடை அணிந்தும், 303 ரக துப்பாக்கிகளுடன் அணி வகுப்பார்கள்.
* 3வதாக வரும் ஜம்மு காஷ்மீர் காலாட்படை வீரர்கள், 1970ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட சீருடை அணிந்து, 7.62 மிமீ ரக துப்பாக்கிகளை எடுத்து வருவார்கள்.
* 4வது மற்றும் 5வதாக சீக்கிய காலாட் படையினர், ராணுவ கட்டளை பிரிவினர் (ஆர்டினென்ஸ்) தற்போதைய சீருடை அணிந்து, இன்சாஸ் ரக நவீன துப்பாக்கிளை ஏந்தி வருவார்கள்.
* 6வதாக வரும் பாராசூட் படை வீரர்கள், சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சீருடையுடன், புதிய ரக ‘டாவோர்’ துப்பாக்கிகளை ஏந்தி வருவார்கள்.
மேலும் செய்திகள்
தவறுதலாக எல்லை தாண்டிய குழந்தை: பாக். வீரர்களிடம் ஒப்படைப்பு
வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நன்கொடை பெறலாம்: எப்சிஆர்ஏ சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம்
6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்கியது
சுயநலத்துக்காக பயன்படுத்த பார்க்கும் அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்: தலைமை நீதிபதி என்வி.ரமணா காட்டம்
பயணிகள் அலறல் 5000 அடி உயரத்தில் விமானத்தில் புகை: 15 நாளில் 5வது சம்பவம்
முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்