சையது மோடி சர்வதேச பேட்மின்டன் பி.வி.சிந்து சாம்பியன்
2022-01-24@ 04:04:13

லக்னோ: சையது மோடி சர்வதேச பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோட் உடன் நேற்று மோதிய சிந்து அதிரடியாக விளையாடி 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இப்போட்டி 35 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. சையது மோடி தொடரில் சிந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2017ல் அவர் இத்தொடரில் பட்டம் வென்றிருந்தார்.
இஷான் - தனிஷா அசத்தல்: கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் இஷான் பட்னாகர் - தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட்களில் மற்றொரு இந்திய ஜோடியான ஹேம நாகேந்திர பாபு - ஸ்ரீவேத்யா குரஸடா ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. உலக டூர் எக்ஸ்டி அந்தஸ்து தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் சாம்பியன் பட்டம் இது.
மேலும் செய்திகள்
3வது டெஸ்ட்டிலும் இங்கி. வெற்றி முகம்; ஒயிட்வாஷ் பரிதாபத்தில் உலக சாம்பியன் நியூசிலாந்து
தொடரை வெற்றியுடன் தொடங்குவது சிறப்பானது; இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி
சில்லி பாயின்ட்...
ரோகித்துக்கு கொரோனா
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ம.பி. முதல் முறையாக சாம்பியன்: பைனலில் மும்பையை வீழ்த்தியது
3வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 296 ரன் இலக்கு
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!