கும்பகோணம் ரயில்நிலையம் அருகே முன்னாள் எம்எல்ஏ மகன் மர்மசாவு: போலீசார் விசாரணை
2022-01-24@ 00:54:40

கும்பகோணம்: கும்பகோணம் ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் முன்னாள் எம்எல்ஏ மகன் இறந்தார். புதுவை மாநிலம் கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ. இவரது மகன் வெற்றிச்செல்வன் (42). இவரது மனைவி ராஜேஸ்வரி (34). இவர்களுக்கு ஹன்சிகா(6) என்ற மகளும் உள்ளார். வெற்றிச்செல்வன் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்னைகள் காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி மாலை கோட்டுச்சேரியில் இருந்து காரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுபற்றி அவரது மனைவி கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் கார் ஒன்று வெகுநேரமாகியும் ஒரே இடத்தில் நின்றதாகவும், காரின் அருகில் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் தகவல் கிடைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காரின் அருகே இருந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது. காரில் இருந்த செல்போனை எடுத்து ரயில்வே போலீசார் ஆய்வு செய்ததில் இறந்தவர் கோட்டுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ பஞ்சவர்ணத்தின் மகன் என்பது தெரியவந்தது. தகவலறிந்து கும்பகோணம் மேற்கு போலீசார் வெற்றிச்செல்வன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மர்மசாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: பொதுமக்கள் தவிப்பு
நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டெடுப்பு
திருச்சி பொதுப்பணித்துறை ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.31.26 லட்சம் பறிமுதல்
கோவை- மஞ்சூர் சாலையில் அரசு பஸ், தனியார் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை கூட்டம்: பயணிகள் பீதி
திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் சேலம் டூரிஸ்ட் நிறுவனத்தில் ஆந்திர போலீசார் விசாரணை
புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழிலை மேம்படுத்த 11 பேர் குழு: ஒன்றிய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் நியமனம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!