பிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரம் தஞ்சை நீதிபதி முன் தந்தை, சித்தி வாக்குமூலம்: இரண்டரை மணி நேரம் அளித்தனர்
2022-01-24@ 00:53:35

தஞ்சை: அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம், இவரது மனைவி கனிமொழி. இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். அவரது மகள் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஒரு தனியார் பள்ளிவிடுதியில் தங்கி படித்துள்ளார். பிளஸ் 2 படித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி விஷம் குடித்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விடுதியில் தன்னை அடிக்கடி வேலை வாங்கியதால் மனஉளைச்சலில் விஷம் குடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 19ம் தேதி மாணவி உயிரிழந்தார். இதையடுத்து விடுதி வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார்.
மதமாற்றம் செய்ய முயன்றதாக கூறி பாஜக சார்பில் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை மாணவியின் பெற்றோர் தஞ்சை நீதித்துறை நடுவர் முன் வாக்குமூலம் அளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை 11.55 மணியளவில் தஞ்சை 3வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் பாரதி முன் மாணவியின் தந்தை மற்றும் சித்தி ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். மதியம் 2.30 மணிவரை தனித்தனியாக நீதிபதி வாக்குமூலம் பெற்றார். இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, ஐகோர்ட் கிளையில் ஒப்படைக்கப்படும் என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
ரூ.47 கோடியில் கரூர் திருமாநிலையூரில் விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
கலெக்டரிடம் விவசாயிகள் புகார் எதிரொலி; மேக்கரை எருமைசாடி நீரோடையில் தடுப்பணை கட்டி ஆக்கிரமிப்பு: பொதுப்பணித்துறை, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு
ராஜஸ்தானில் இருந்து கொண்டு வந்து நடுத்தெருவில் விட்டுச் சென்ற 18 ஒட்டகங்கள் ஓசூரில் மீட்பு: கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை
திருபுவனை, மதகடிப்பட்டு, கண்டமங்கலம், அரியூரில் மேம்பால பணிகள் தீவிரம்: 4 வழிச்சாலை பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்
குஜராத் போல் சலுகைகள் தூத்துக்குடி உப்பு உற்பத்தி தொழில் மேம்படுமா?: உற்பத்தியாளர்கள் கோரிக்கை
அனைத்து கிராமங்களுக்கும் கூடுதலாக விநியோகம் செய்ய ரூ.4600 கோடியில் 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்: வடிவமைப்பு பணிகள் தீவிரம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்