மாநகர பேருந்தில் பயணம் செய்த சத்துணவு அமைப்பாளரின் பர்சை திருடி வங்கி கணக்கிலிருந்து ரூ.33,500 அபேஸ்: இன்ஸ்பெக்டர் சாதுர்யத்தால் ரூ.4 லட்சம் தப்பியது; சிசிடிவி கேமரா பதிவு மூலம் ஆசாமிக்கு வலை
2022-01-24@ 00:03:03

சென்னை: சென்னை கோவூர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (43), அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தண்டையார்பேட்டையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார். பின்னர், அங்கிருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக, தண்டையார்பேட்டையில் இருந்து மாநகர பேருந்தில் ஏறி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அங்குள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்குவதற்காக தனது கைப்பையில் வைத்திருந்த மணிபர்சை எடுக்க முயன்றபோது, அது காணாமல் போயிருப்பது தெரிந்தது. அந்த பர்சில் அவரது ஏடிஎம் கார்டு மற்றும் ரகசிய குறியீட்டு எண், பணம் உள்ளிட்டவை இருந்துள்ளது.
இதனால், என்ன செய்வது என தெரியாமல் தவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.33 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் வடக்கு கடற்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் விசாரணை நடத்தினார். மேலும், சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்புகொண்டு அந்த பெண்ணின் வங்கி கணக்கை உடனடியாக முடக்கியதால், அதில் இருந்த ரூ.4 லட்சம் தப்பியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:
On the city bus traveling stealing the purse of the nutrition organizer மாநகர பேருந்தில் பயணம் சத்துணவு அமைப்பாளரின் பர்சை திருடிமேலும் செய்திகள்
புல்லட் வாங்க மனைவியின் 17 சவரனை திருடிய புதுமாப்பிள்ளை: கொள்ளை போனதாக நாடகமாடியது அம்பலம்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது: 600 மாத்திரைகள் 100 ஊசி பறிமுதல்
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; அதிகாலை எழுந்து சாணி தெளிக்க சொன்ன மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்: ஆண் நண்பருடன் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
கோயில் உண்டியல் உடைப்பு
ஆட்டோவில் வந்து கைவரிசை; மாஸ்க் அணிந்து திருட்டு அண்ணன், தம்பி கைது
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்