மீனவர்களின் படகு ஏலம் இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தர வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்
2022-01-24@ 00:02:52

சென்னை: தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படும் என்ற இலங்கை அரசின் அறிவிப்பை தடுக்க ஒன்றிய அரசு அழுத்தம் தர வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாமக தலைவர் ராமதாஸ்: தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட 105 படகுகள் வரும் பிப்.5ம் தேதி முதல் ஏலத்தில் விடப்படவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதன்படி இலங்கை சிறைகளில் இப்போது வாடும் 56 மீனவர்களையும், அனைத்து படகுகளையும் விடுவிக்கும்படி இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தர வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் விடுதலை அடையும் போது அல்லது அவர்கள் விடுவிக்கப்படும் போது, அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும், உடைமைகளையும் திருப்பி வழங்க இலங்கை கடற்படை முன்னதாக ஒப்புக் கொண்டதற்கு மாறாக இலங்கை அரசு நடந்து கொள்வது, மீனவர்கள் வாழ்வாதார உரிமைக்கு எதிரானது என்பதை இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறி, தமிழ்நாட்டு மீனவர்கள் படகுகள் ஏலம் விடப்படுவதை தடுக்க வேண்டும் என ஒன்றிய அரசையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறது.
Tags:
Fishermen Boat Auction Sri Lanka Union Government Pressure Leaders மீனவர்களின் படகு ஏலம் இலங்கை ஒன்றிய அரசு அழுத்தம் தலைவர்கள்மேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு: அதிகாரிகள் தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மின்வாரிய குறைதீர் கூட்டம்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி
சியுஇடி நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
பத்திரப்பதிவுத்துறையில் 12 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!