நேதாஜியின் கொள்கையை கடைபிடிப்போம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதிமொழி
2022-01-24@ 00:02:35

சென்னை: நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை, ஆளுநர் மாளிகையில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, இந்திய சுதந்திரத்திற்காக நேதாஜி ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளை வியந்து போற்றினார். ‘ஒரு நபர் தன் கொள்கைக்காக உயிரையும் துறக்கலாம். ஆனால் அக்கொள்கையானது, அவரது மரணத்திற்குப் பின்னர், ஆயிரம் உயிர்களில் பிறப்பெடுக்கும்’ என்னும் நேதாஜியின் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்றை ஆளுநர் எடுத்துரைத்தார். இதேபோல், சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும், நாட்டின் முன்னேற்றத்திற்கான நமது பார்வையை மேம்படுத்தவும் நமது இளைஞர்கள் மற்றும் மக்களை வலியுறுத்தினார். மேலும், நாடு முழுவதும் ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா'வைக் கொண்டாடும் இத்தருணத்தில், ‘எப்போதும் தேசம் முதலில்’ என்கிற நேதாஜியின் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுப்போம் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர், ஆனந்த்ராவ் வி.பாட்டில், சென்னை ஆளுநர் மாளிகை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:
Netaji Policy Adherence Governor RN Ravi Pledge நேதாஜி கொள்கை கடைபிடிப்போம் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதிமொழிமேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு: அதிகாரிகள் தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மின்வாரிய குறைதீர் கூட்டம்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி
சியுஇடி நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
பத்திரப்பதிவுத்துறையில் 12 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!