SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 ஆண்டுகளில் 60% எம்எல்ஏக்கள் கட்சி தாவி சாதனை: அதிரவைக்கும் கோவா அரசியல் களம்..!

2022-01-23@ 14:57:45

பனாஜி: விளையாட்டில் சாதனை, மருத்துவத்தில் சாதனை, விண்வெளி ஆய்வில் சாதனை என்று சாதனையில் எத்தனையோ வகைகள் இருக்க அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் கட்சி தாவலில் கோவா எம்எல்ஏக்கள் சாதனை படைத்திருப்பது வாக்காளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காதலர் தினமான பிப். 14ம் தேதி தான் காதலர்களுக்கு மிகவும் பிடித்தமான கோவாவில் சட்டப்பேரவை தேர்தல். ஆனால் அங்கு அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் முகம் சுளிக்கவைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 60% எம்எல்ஏக்கள் பதவி சுகத்திற்காக கட்சி தாவி தலைமையை அதிர வைத்துள்ளனர்.

40 இடங்களை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு 2017ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்வான எம்எல்ஏக்களில் 24 பேர் கட்சி தாவலில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவர்களும் விதிவிலக்கல்ல என்பது தான் உச்சகட்ட கொடுமை. கட்சி தாவலில் காங்கிரஸ், பாஜக என்று பெரிய கட்சிகள் தொடங்கி மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் வரை தப்பவில்லை. 2017ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்தக் கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்தவர்களின் கதை வேறு ரகம்.

கியூபெம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் சந்திரகாந்த் கவ்லேகர். கோவா அரசியலில் கம்பிபீரமாக வலம் வரவேண்டிய இவர், 2019ம் ஆண்டு திடீரென பாஜகவில் சேர்ந்தார். அவருடன் 10 எம்எல்ஏக்கள் அப்போது பாஜகவுக்கு தாவியது கோவா வாக்காளர்களை தலைகுனிய வைத்தது. தேசிய கட்சிக்கு தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று உள்ளூர் கட்சியான எம்.ஜி.பி.யில் இருந்து 2 எம்எல்ஏக்கள் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு தாவினர். மற்றோரு குட்டிக் கட்சியான கோவா ஃபார்வேர்ட் கட்சி எம்எல்ஏவும் விதி விலக்கல்ல.

கோவா முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏவுமான ரவி நாயக் பாஜகவின் அண்மைக் கால வரவு. மற்றோரு முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான லூசிங்கோ ஃபலைரோ தனது தனது பங்குக்கு திரிணாமுல் காங்கிரஸ் சேர்ந்துள்ளார். சர்ச்சில் அலிமாவோ என்ற மற்றோரு முன்னாள் முதலமைச்சரும் சில தினங்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார். எதிர்க்கட்சியினர் பாஜகவுக்கு தாவி வரும் நிலையில் அக்கட்சியினர் மற்ற கட்சிகளுக்கு மாறி வருகின்றனர்.

40 இடங்களை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 17 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் கட்சியால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால் 13 இடங்களை மட்டுமே வென்ற பாஜக, கட்சி மாறியவர்களின் உதவியுடன் அங்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இது ஜனநாயகத்தின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில் ஒரு சட்டப்பேரவையின் 60% எம்எல்ஏக்கள் வாக்களித்தவர்களை முட்டாளாக்கியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • israel-desert-24

  இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

 • Ecuador_protests

  ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

 • pondi-scl-23

  புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

 • admk-23

  50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

 • Goat_Pakistan

  பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்