சித்தூரில் ஜெய்பீம் சினிமா பாணியில் பணம் திருடியதாக வேலைக்கார பெண்ணை தாக்கிய போலீசார்: ஜெயிலர் மனைவியே செலவழித்தது அம்பலம்
2022-01-23@ 00:42:24

சித்தூர்: ஆந்திர மாநிலம், சித்தூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் பாபு (38), கூலி தொழிலாளி. இவரது மனைவி உமா மகேஸ்வரி (32). இவர் அதே பகுதியில் உள்ள சித்தூர் கிளை சிறைச்சாலையில் ஜெயில் அதிகாரியாக பணிபுரியும் வேணுகோபால் வீட்டில் வேலை செய்கிறார். கடந்த 17ம் தேதி ஜெயிலர் வீட்டில் ரூ.2 லட்சம் பணம் காணவில்லை என போலீசில் புகார் தரப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு உமா மகேஸ்வரியை போலீசார் அழைத்தனர். கணவருடன் காவல் நிலையம் சென்ற உமா மகேஸ்வரியை சப்-இன்ஸ்பெக்டர் அனில் குமார் தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கினார்.
தொடர்ந்து, காவலர் ஒருவர் உமா மகேஸ்வரியை ஜெய்பீம் சினிமா பாணியில் கை, கால்களை கயிற்றால் கட்டி லத்தியால் அடிப்பாதத்திலும், முதுகிலும் சரமாரியாக அடித்துள்ளார். தலையை பிடித்து சுவற்றில் பலமாக மோதியுள்ளார்.பணத்தை திருடவில்லை என உமா மகேஸ்வரி கூறியும், போலீசார் விடவில்லை. பின்னர், இன்ஸ்பெக்டர் நரசிம்ம ராஜூவிடம் அந்த பெண்ணை அழைத்துச் சென்ற காவலர், அவர் கண்ணெதிரே மீண்டும் லத்தியால் அடித்துள்ளார்.ஆனால் ‘ஜெயிலரின் மனைவியே பணத்தை எடுத்து செலவு செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடக்க முடியாத நிலையில், அந்தப் பெண் பத்திரிகையாளர் களிடம் நடந்த விவரங்களை நேற்று தெரிவித்தார். அதன் பிறகே, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது, அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் செய்திகள்
ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!!
கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டி
பாதாள சாக்கடை பணிகளால் மீண்டும் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலை: சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம் பேரூராட்சியில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சூனாம்போடு அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சத்தில் நவீன கழிப்பறை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;