94.19% பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி சென்னை பெருநகர மாநகராட்சி இந்தியாவிலேயே முன்னிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
2022-01-23@ 00:32:17

சென்னை: சென்னை, ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமையும், கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிந்து கொள்ளும் வகையில் ஆய்வகத்துடன் பரிசோதனை செய்யும் வகையில் சென்னை ஐ.ஐ.டி உருவாக்கிய நடமாடும் வாகனத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐ.ஐ.டி இயக்குநர் காமகோட்டி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.அதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நேற்று 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை 3.32 கோடி தடுப்பூசிகள் மெகா தடுப்பூசி முகாம் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 600 சிறப்பு முகாம் வரும் வியாழக்கிழமை அமைத்து தடுப்பூசி செலுத்தப்படும். இதுவரை தமிழகத்தில் 9.17 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் 94.19% பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள பெருநகர மாநகராட்சியில் அதிக தடுப்பூசி செலுத்தியதில் முன்னிலை வகிக்கிறது. 74.11 % பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 21 மாநகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 2,580 ஊராட்சிகளில் 100 சதவீதம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை ₹1100 இருக்கும் நிலையில், மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அரசாங்கம் தடுப்பூசி முகாம் நடத்துகிறது. எனவே தடுப்பூசிக்கு போலி சான்றிதழ் கொடுக்க வேண்டாம், வாங்க வேண்டாம் என்பதை சிந்தித்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.உள் மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்றின் பாதிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன் 9 ஆயிரமாக இருந்தது நேற்றுமுன்தினம் 7 ஆயிரமாக சற்று குறைந்துள்ளது என்றார்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 13 பின்பிரிவு உதவி பொறியாளர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு
சென்னையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொடரும் பேச்சுவார்த்தை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ120.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
204-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை
பணியிடத்தில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஐந்து நாள்கள் அடித்து வெளுக்கும் மழை: வானிலை ஆய்வு மையம்!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!