6-12 வயது வரை சிறுமிக்கு தொல்லை பலாத்கார ‘பெருசு’க்கு 27 ஆண்டு கடுங்காவல்
2022-01-23@ 00:09:32

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே விதுரா ஆனப்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் காணி (55). பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் ஒருவரின் மகளை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்து வந்து உள்ளார். 6 வயது முதல் சிறுமியை கொடுமைப்படுத்த தொடங்கிய பிரபாகரன், கடந்த 2019ம் ஆண்டு வரை 7 வருடங்கள் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தனது பள்ளி ஆசிரியையிடம் பிரபாகரன் தன்னை பலாத்காரம் செய்து வருவது குறித்து சிறுமி கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, விதுரா போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசாரின் விசாரணையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு நெடுமங்காடு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பில்குல், பிரபாகரன் காணிக்கு 27 வருடம் கடுங்காவல் சிறையும், ₹ 65 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
உதய்பூரில் தையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டதற்கும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கும் தொடர்பு : திடுக்கிடும் தகவல்!!
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.! வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆந்திரப்பிரதேசத்தில் வரும் 4ம் தேதி விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!!
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து நீக்கம் : உத்தவ் தாக்கரே அதிரடி
தோண்ட தோண்ட சடலம்.. மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி... உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 நிதியுதவி அறிவிப்பு!!
அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்