ஐபிஎல் 15-வது தொடர் : புதிதாக களமிறங்கும் இரு அணிகள்: மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும்: பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல்
2022-01-22@ 21:49:08

டெல்லி: நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றான ஐபிeல் கிரிக்கெட் போட்டியின் 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டு புதிதாக லக்னோ மற்றும் ஆமதாபாத் அணிகள் அறிமுகமாவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிற நிலையில் போட்டிகளை இந்தியாவில் நடத்த விரும்புவதாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் விரும்புவதாகவும் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவதில் தான் உறுதியாக உள்ளோம் என ஜெய் ஷா தெரிவித்தார்.
ஆனால், அதிகாரப்பூர்வமாக போட்டிகள் நடைபெறும் இடம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தியாவில் கொரோனா நோய் பரவல் அதிகரித்த காரணத்தால் ஐபிஎல் 13-வது தொடர் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெற்றது. அதேபோல் 14-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்ததால் பாதியில் நிறுத்தப்பட்டு எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் தொடர் எங்கு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
பன்ட் - ஜடேஜா அபார ஆட்டம்
10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
மலேசியா ஓபன் பேட்மின்டன்; காலிறுதியில் வீழ்ந்தார் சிந்து
இந்தியாவுடன் டி20 தொடர்; விலகினார் ஸ்டோக்ஸ்
ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் போட்டி நீரஜ்சோப்ரா; வெள்ளி வென்று புதிய சாதனை
டோனியை போல் எனது வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்துவேன்; புதிய கேப்டன் பும்ரா பேட்டி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்