தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
2022-01-22@ 19:05:33

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு அனைவருக்கும் வீட்டுவசதி என்ற குறிக்கோளை எய்தும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான மக்களுக்கும் வாங்கத்தக்க விலையில் வீடுகளின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்காக பல்வேறு திட்டங்கள் வாயிலாக, இலட்சக்கணக்கான மக்கள் வீட்டு உரிமையாளர்களாக வேண்டும் என்ற அவர்களுடைய கனவை நனவாக்கிய ருமைக்குரியது.
அத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகன் அவர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். பூச்சி எஸ் முருகன் அவர்கள் ஏற்கனவே திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், விளையாட்டு மேம்பாட்டுக் குழு உறுப்பினர், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பிறப்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவராக துறைமுகம் காஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிரிழப்பு; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,658 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
சென்னையில் ஜூலை 8-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு வளரவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விபரீதம்; மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
கூடுவாஞ்சேரி அருகே மறியல் போராட்டத்தால் பரபரப்பு, டாரஸ் லாரி மோதி பெண் பலி; 30 அடி தூரத்துக்கு இழுத்து சென்ற அவலம்
தந்தை நினைவாக வைத்திருந்த வைரக்கல் பதித்த ரூ1.50 லட்சம் மதிப்புள்ள தங்கப்பேனா திருட்டு: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!