SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரவாயல் அருகே கூவம் ஆற்றில் 6 மாதத்தில் உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

2022-01-22@ 17:09:58

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் குறித்து இன்று காலை அமைச்சர் கே.என்.நேரு, டி.ஆர்.பாலு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இப்பாலம் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையின்போது, மதுரவாயல் அருகே நொளம்பூர் செல்லும் வழியே, கூவம் ஆற்றை கடக்க முயன்ற 3 பேர் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அங்குள்ள 2 தரைப்பாலங்களை தற்போது உயர்மட்ட மேம்பாலமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.  இந்நிலையில், மதுரவாயல் அருகே நொளம்பூரில் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலப் பணிகள் மேற்கொள்வது குறித்து, இன்று காலை கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள 2 தரைப்பாலங்களை அமைச்சர் கே.என்.நேரு, டி.ஆர்.பாலு எம்பி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், நொளம்பூரில் உள்ள தரைப்பாலத்தை உயர்த்தி, அகலப்படுத்தி கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு பாலம் மாநகராட்சி கட்டுபாட்டிலும், மற்றொன்று பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  140 மீட்டர் அகலம் கொண்ட இந்த 2 பாலங்களின் பணிகளை மாநகராட்சி எடுத்து செய்ய உள்ளது. மேலும், கூவம் ஆற்றின் கரையை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு 6 மாதத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வில் மதுரவாயல் எம்எல்ஏ கணபதி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்