SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீண்ட நாட்களாக திறக்கப்படாததால் கொள்முதல் நிலையம் முன் நெல்லை கொட்டி காத்திருக்கும் விவசாயிகள்-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

2022-01-22@ 13:51:21

கும்பகோணம் : கும்பகோணம் அருகே அரசு கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் காத்து கிடக்கும் அவலநிலை உள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா அன்னப்பன்பேட்டை அதனை சுற்றியுள்ள வேப்பங்குளம், பொந்தையாகுளம், நரியனூர் மற்றும் நெய்தலூர் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடை பருவத்தை எட்டியுள்ளதால் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியை தொடங்கி விட்டனர்.

அன்னப்பன்பேட்டை அரசு கொள்முதல் நிலையம் நீண்ட நாட்களாக திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையம் முன்பும், சாலையோரமும் கொட்டி வைத்து ஒரு வார காலமாக காத்து கிடக்கின்றனர். இன்னும் சில விவசாயிகள் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை பருவம் தாண்டியும் நெற்பயிரை அறுவடை செய்யாமல் உள்ளனர்.

விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து உடனடியாக அன்னப்பன்பேட்டை அரசு கொள்முதல் நிலையத்தை திறந்து, நெல் கொள்முதல் செய்யும் பணியை விரைவில் தொடங்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HOTDOGGG111

    ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!

  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்