காமராஜர் மணிமண்டப பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
2022-01-22@ 13:49:47

புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் மணிமண்டப பணிகளை விரைவில் முழுமையாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் காமராஜர் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்ட நிலையில், நிதி நெருக்கடி காரணமாக பணிகள் தொய்வடைந்தது.
இதை தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது காமராஜர் மணிமண்டபம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் திறப்பு விழா தள்ளிப்போனது. இருந்தபோதும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருந்தது. இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையம், உலகத்தரம் வாய்ந்த நூலகம், பிரம்மாண்ட ஆடிட்டோரியம், காமராஜர் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சி அரங்கம் என பல அம்சங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே கடந்த 12ம் தேதி நடந்த தேசிய இளைஞர் தின விழாவின்போது பிரதமர் மோடி, காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து நேற்று மாலை முதல்வர் ரங்கசாமி காமராஜர் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனுடன் சென்ற அவர் அங்கு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மீதமுள்ள பணிகளை முழுமையாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் அர்ப்பணிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
சோமங்கலம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாப பலி
கேளம்பாக்கம் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் தீ விபத்து ரூ. 20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ரூ.38 லட்சத்தில் துணை வேளாண்மை மைய கட்டிடம்
காஞ்சிபுரம் மாவட்ட இடைத்தேர்தல் மது கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
வாரணவாசி ஊராட்சியில் அகற்றியதற்கு பதிலாக புதிதாக சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!