சின்னசேலத்தில் மலைபோல் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை-பேரூராட்சி நடவடிக்கை தேவை
2022-01-22@ 13:02:16

சின்னசேலம் : சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தண்ணீர் மற்றும் குளிர்பான குடுவைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் காந்தி நகர், சேலம் மெயின்ரோடு, வாரசந்தையை ஒட்டியுள்ள சாக்கடை கால்வாய்கள், ஏரிக்கரை மற்றும் நீர்நிலை, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் குப்பைமேடு போல் தேங்கி கிடக்கிறது. ஆனால் சின்னசேலம் பேரூராட்சியில் அன்றாடம் கடைவீதியில் கிடக்கும் பிளாஸ்டிக்கழிவுகளை மட்டும்தான் அள்ளுகின்றனர். சாக்கடை கால்வாய்களில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை.
சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கொசு தொல்லை உண்டாகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதைப்போல ஏரியில் பிளாஸ்டிக் கழிவை கொட்டுவதால் தண்ணீர் வடிந்த நிலையில் பூமியில் புதைகிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படுகிறது. அதனால்தான் பிளாஸ்டிக் ஒழிப்பில் அரசு தீவிரமாக செயல்படுகிறது. ஆனால் அதை செயல்படுத்த வேண்டிய பேரூராட்சி நிர்வாகம் மந்தமாக உள்ளது. ஆகையால் வாரம் ஒரு நாள் மெகா கேம்ப் நடத்தி பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் செய்திகள்
5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டம்
கீழ்மணம்பேடு அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் கலெக்டர் ஆய்வு
12 ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மோட்டார்கள்: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்
பூரிவாக்கம் ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
பள்ளி அருகேயுள்ள டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும்: மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தல்
அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பழைய தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலைநீர் தேக்க தொட்டி கட்டி தர வலியுறுத்தல்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!