திம்பம் மலைப்பாதையில் மர பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து-3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
2022-01-22@ 12:21:55

சத்தியமங்கலம் : திம்பம் மலைப்பாதையில் மர பாரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் குசால்நகர் பகுதியிலிருந்து நேற்று காலை மரக்கட்டைகள் பாரம் ஏற்றிய லாரி கோவில்பட்டி செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. 6வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த மரக்கட்டைகள் சாலை முழுவதும் சிதறின.
இதனால் பேருந்து, கார் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அப்போது பேருந்தில் வந்த பயணிகள், லாரி ஓட்டுனர்களிடம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால்தான் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். இதனால் லாரி ஓட்டுநருக்கும், பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் இருந்த பண்ணாரி சோதனை சாவடி போலீசார் இருதரப்பினரை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, பண்ணாரியில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் சிதறிய மரக்கட்டைகள் அகற்றப்பட்டு லாரி மீட்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீரானது.
மேலும் செய்திகள்
அதிமுக பொதுக்குழுவில் பெரும் தொகை பட்டுவாடா: எடப்பாடிக்கு மெஜாரிட்டி கிடைத்த ரகசியத்தை அம்பலபடுத்தினார் புதுச்சேரி மாநில செயலாளர்
கைதி மாயம்: சேலம் சிறை அதிகாரியிடம் 3 மணி நேரம் விசாரணை
கூட்டுறவுத்துறையில் அதிமுக ஆட்சியில் ரூ780 கோடி முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
ரூ700 கோடி நில மோசடி வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படை
நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் தவித்த இலங்கை டாக்டருக்கு உதவிய திருச்செந்தூர் போலீஸ்காரர்: பாராட்டு குவிகிறது
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் காத்திருப்பு போராட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்