சையது மோடி சர்வதேச பேட்மின்டன்...அரை இறுதியில் சிந்து
2022-01-22@ 00:12:37

லக்னோ: சையது மோடி சர்வதேச பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். காலிறுதியில் தாய்லாந்தின் சுபனிதா கேட்திங்குடன் நேற்று மோதிய சிந்து 11-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அடுத்த 2 செட்களிலும் சிறப்பாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 11-21, 21-12, 21-17 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 5 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
அரையிறுதியில் ரஷ்யாவின் எவ்ஜெனியா கொசெட்ஸ்கயாவுடன் சிந்து மோதுகிறார். பிரனாய் வெளியேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பிரான்ஸ் வீரர் அர்னாட் மெர்க்லேவுடன் மோதிய எச்.எஸ்.பிரனாய் (இந்தியா) 19-21, 16-21 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 59 நிமிடத்துக்கு நீடித்தது.
மஞ்சுநாத் அசத்தல்: மற்றொரு இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் தனது காலிறுதியில் 11-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். அரையிறுதியில் மஞ்சுநாத் - மெர்க்லே மோதுகின்றனர். கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜுன் - ட்ரீசா ஜாலி ஜோடி தகுதி பெற்றுள்ளது.
மேலும் செய்திகள்
பன்ட் - ஜடேஜா அபார ஆட்டம்
10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
மலேசியா ஓபன் பேட்மின்டன்; காலிறுதியில் வீழ்ந்தார் சிந்து
இந்தியாவுடன் டி20 தொடர்; விலகினார் ஸ்டோக்ஸ்
ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் போட்டி நீரஜ்சோப்ரா; வெள்ளி வென்று புதிய சாதனை
டோனியை போல் எனது வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்துவேன்; புதிய கேப்டன் பும்ரா பேட்டி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்