SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியானாவில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி தியாகு வேலூர் சிறையில் அடைப்பு

2022-01-22@ 00:12:05

காஞ்சிபுரம்: அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி தியாகு காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பு, கட்டப் பஞ்சாயத்து உள்பட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி தர் கடந்த 2017ம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பிறகு, அந்த இடத்தைப் பிடிக்க ரவுடிகள் இடையே நடந்த போட்டியால் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளன.  இதை தொடர்ந்து அவரது முக்கிய கூட்டாளிகளான தினேஷ்குமார் மற்றும் பொய்யாகுளம் தியாகு ஆகியோர் தனித்தனி கோஷ்டிகளாக பிரிந்து, தங்களில் யார் அடுத்த தாதா என்ற போட்டியில் 13க்கும் மேற்பட்ட கொலைகளை செய்தனர்.
காஞ்சிபுரம் பொய்யாகுளத்தை சேர்ந்த தியாகு (எ) தியாகராஜன் காஞ்சிபுரத்தில் பட்டு ஜவுளி வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என எல்லோரையும் மிரட்டி வந்தார். அவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் போலீசார், தியாகுவை கைது செய்வதும், அவர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருப்பது வாடிக்கையாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்த தியாகு திடீரென தலைமறைவானார். ஆனாலும் அவர், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டார்.இந்த வேளையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரவுடிகளை ஒழிக்க சிறப்பு அதிகாரியாக கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை  நியமிக்கப்பட்டார். இதையடுத்து பழைய ரவுடிகள் மற்றும் புதிய ரவுடிகளை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், அரியானா மாநிலம், பரிதாபாத் பகுதியில் தியாகு பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த சில நாட்களாக அபகுதியில் சிறப்பு தனிப்படை போலீசார் கண்காணித்து, நேற்று முன்தினம் தியாகுவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதையடுத்து அவரை விமானம் மூலம் அவரை சென்னை அழைத்து வந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவுகள் மாலை 4 மணிக்கு தெரியவரும் என்பதால் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் மாலை வரை, தியாகுவிடம் துருவி துருவி விசாரித்தனர். பின்னர், மாலை 4 மணியளவில் காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சந்திரன், குற்றவாளி தியாகுவை வரும் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ரவுடி தியாகு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

 • glass-park-29

  ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

 • america_tra11

  அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்