இந்தியாவுக்கு எதிராக பொய் செய்தி பாக்.கின் 35 யுடியூப் சேனல்களுக்கு தடை: ஒன்றிய அரசு அதிரடி
2022-01-22@ 00:11:54

புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பும் 35 யுடியூப் சேனல்கள், 2 இணையதளங்களுக்கு தடை விதித்து ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இந்த 35 யுடியூப் அலைவரிசைகள், 1 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும், 130 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கொண்டுள்ளன.
மேலும், இணையதளத்தில் இந்தியாவுக்கு எதிரான அவதூறு தகவல்களை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ள 2 டிவிட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் முகநூல் கணக்கு ஒன்றும் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.தகவல் தொழில்நுட்ப இடைநிலை வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் மீடியா விதிமுறைகள் சட்டம் 2021, விதி 16-ன் கீழ், இதற்கான 5 உத்தரவுகளை ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.இந்த சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களை உன்னிப்பாக கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இந்திய புலனாய்வு அமைப்புகள் அளித்த பரிந்துரையின் பேரில் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இவற்றை தடை செய்துள்ளது. இவற்றில் சில யுடியூப் சேனல்கள், பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களால் நடத்தப்படுகின்றன.
மேலும் செய்திகள்
தவறுதலாக எல்லை தாண்டிய குழந்தை: பாக். வீரர்களிடம் ஒப்படைப்பு
வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நன்கொடை பெறலாம்: எப்சிஆர்ஏ சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம்
6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்கியது
சுயநலத்துக்காக பயன்படுத்த பார்க்கும் அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்: தலைமை நீதிபதி என்வி.ரமணா காட்டம்
பயணிகள் அலறல் 5000 அடி உயரத்தில் விமானத்தில் புகை: 15 நாளில் 5வது சம்பவம்
முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்