‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பெற்றது ஜெய்பீம்: சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி
2022-01-21@ 14:41:28

லாஸ்ஏஞ்சல்: உலகின் மிகப்பெரிய திரைப்படம் விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த படம், ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கினார். அண்மையில் ஆஸ்கர் அமைப்பு இந்த படத்துக்கு சிறந்த கவுரவத்தை அளித்தது. ஆஸ்கர் அமைப்பு தன்னுடைய யூடியூப் சேனலில் ஜெய்பீம் படத்தின் காட்சிகளை பகிர்ந்தது. இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி, இந்திய சினிமாவுக்கே கிடைத்த கவுரவமாக கருதப்படுவதாக திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜெய்பீம் திரைப்படம் 94-வது ஆஸ்கர் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்ட தகுதிப் பட்டியலில் 276 திரைப்படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், மோகன்லால் நடிப்பில் வெளியான ’மரைக்காயர்’ திரைப்படமும் தேர்வாகியுள்ளது. பழங்குடியின பெண்ணின் சட்டப் போராட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படம், நிஜ சம்பவம் என்பதகுறிப்பிடத்தக்கது. முன்னதாக, சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த ஆஸ்கர் தேர்வு பட்டியலில் இருந்த நிலையில் இம்முறை ‘ஜெய்பீம்’ தேர்வாகியிருப்பதால் சூர்யா ரசிகர்கள் இணையத்தில் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவில் கடும் குழப்பம் கருக்கலைப்புக்கு அனுமதி தந்த உயர் நீதிமன்றங்களால் பரபரப்பு: உடனடி தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
மேற்கு நாடுகளின் மீதான கோபத்தை உக்ரைன் மக்கள் மீது காட்டும் ரஷ்யா: குடியிருப்புகளை தாக்குவதன் பின்னணி
ஈரானில் நிலநடுக்கம் 5 பேர் பலி
மெல்ல மெல்ல குறையும் கொரோனா; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 55.35 கோடியை தாண்டியது.! 63.59 லட்சம் பேர் உயிரிழப்பு
ஈரானின் பந்தர்அப்பாஸ் நகரின் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவு.! 3 பேர் உயிரிழப்பு
தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிள் லண்டலின் கண்டுபிடிப்பு..!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்