பரமக்குடியில் சேதமடைந்த தரைப்பாலம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
2022-01-21@ 14:23:36

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றில் உடைந்த பாலத்தை உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன்பு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பழைய ஆற்றுப்பாலம் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. அப்போது போக்குவரத்திற்காக தற்காலிகமாக தரைப்பாலம் கட்டப்பட்டது. தொடர்ந்து, புதிய ஆற்றுப் பாலம் திறக்கப்பட்ட நிலையிலும், தரைப்பாலத்தை போக்குவரத்துக்கு தொடர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்து வாகனங்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த மாதம் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக ஓடிய வெள்ள நீரால் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருந்த போதிலும் உடைந்த இடிபாடுகளுக்கு மத்தியில் பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர். இதனால் தேவையற்ற விபத்து ஏற்பட்டு உயிர் பலியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் உடைந்த பாலத்தை அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்
தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்
நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு கேரள காலணி அணிவிப்பு
கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
வழக்கு விவரங்களை இ-கோர்ட் வெப்சைட்டில் உடனே பதிவேற்ற வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்