கன்டெய்னர் மோதி பெரியார் சிலை உடைந்தது
2022-01-21@ 13:53:09

விழுப்புரம் : விழுப்புரம் திருவிக வீதி, காமராஜர் வீதி சந்திப்பு பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக பெரியார் சிலை உள்ளது. 3 அடி பீடத்தின் மீது 6 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டு, இரும்புக்கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவிக வீதி வழியாக சென்ற ஒரு கன்டெய்னர் லாரி, காமராஜர் சாலையில் வளையும்போது, பெரியார் சிலை பீடத்தில் மோதியதில் முற்றிலும் இடிந்து விழுந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த நகர போலீசார் வந்து லாரியை ஓட்டி வந்த மகாராஷ்டிர மாநிலம் வால்கி பகுதியைச் சேர்ந்த மச்சீந்திராதபலி(52)யை கைது செய்தனர். சிலை உடைப்பை கண்டித்து திமுக, அதிமுக, திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்கு வந்த அதிகாரிகள், சிலை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தபின் அனைவரும் கலைந்துசென்றனர். இதனைத்தொடர்ந்து, உடைந்த சிலையை ஊழியர்கள் மீட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று வைத்தனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மின் தகன மேடை அமைக்க நிதியுதவி
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
திருக்கழுக்குன்றத்தில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மறைவு
மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது
செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சோமங்கலம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாப பலி
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!