காஞ்சிபுரம் சர்வ தீர்த்தம் கரையோரம் காமாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்
2022-01-21@ 00:06:29

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சர்வ தீர்த்தம் கரையோரம் காஞ்சி காமகோடி பீடம் மூலம் நிர்வாகம் நடக்கும் திருக்கோயில்களான ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர், காமேஸ்வரர், ஹிரண்யேஸ்வரர் கோயில்களில் மகா கும்பாபிஷக விழா நேற்று நடந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தலைமையில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு ஸ்ரீ அக்ஷயம் டிரஸ்ட் மூலம் இந்தக் கோயில்களில் முழுமையான திருப்பணிகள் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து 6 கால யாகசாலை பூஜைகள், சிறப்பு தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் மூலவர் விமானம் மற்றும் மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடத்தி், காமேஷ்வர குருக்கள், பிரபாகரன் குருக்கள் தலைமையில், கோயில் விமானத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலயப் பணிகளை சரவணன் ஸ்தபதி செய்தார்.
Tags:
Kanchipuram Sarva Theertham Coastal Kamatchi Ambal Sameda Kasi Vishwanathar Temple Maha Kumbabhishekam காஞ்சிபுரம் சர்வ தீர்த்தம் கரையோரம் காமாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்மேலும் செய்திகள்
ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!!
கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டி
பாதாள சாக்கடை பணிகளால் மீண்டும் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலை: சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம் பேரூராட்சியில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சூனாம்போடு அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சத்தில் நவீன கழிப்பறை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;