தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா; 39 உயிரிழப்பு: தொற்றில் இருந்து 19,978 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
2022-01-20@ 19:59:06

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.82 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.88 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 28,561 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16,234 பேர் ஆண்கள், 12,327 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 326 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 39 பேர் உயிரிழந்துள்ளார். 19 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 20 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. இன்று 19,978 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 26 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம் :முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்து!!
பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்..உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
ஜூலை 01: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
ஓபிஎஸ் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி; கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி
பெரியபாளையம் பவானியம்மனுக்கு காணிக்கையாக வந்த 130 கிலோ பொன் நகைளை அமைச்சர் சேகர்பாபு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்
வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்; பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கியது
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்