கிராவல் மண் திருட்டு: பிப்.3க்குள் முடிவெடுக்க கூடுதல் தலைமை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2022-01-20@ 17:21:23

சென்னை: தேனி மாவட்டம் வீரநாயக்கன்பட்டியில் அரசு நிலங்களில் இருந்து முறைகேடாக 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் எடுக்கப்பட்ட புகாரில் கனிமவளத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு நிலங்களில் இருந்து அனுமதி இல்லாமல் ரூ.500 கோடி அளவிற்கு கிராவல் மண் எடுத்ததாக உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் புகார் அளித்திருந்தார். இதில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவர்களது உறவினர்கள் மூலமாக இந்த அனுமதியை பெற்று கிராவல் மண் எடுத்ததாகவும் இதற்காக வருவாய்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்ததாகவும் அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுக்குள் உள்ளாகிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கோரப்பட்ட போது கனிமவளத்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் அனுமதி அளிக்கவில்லை என்றும் வருவாய் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே கனிமவளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் மனு மீது பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
Tags:
கிராவல் மண்மேலும் செய்திகள்
தமிழ்நாடு நாள் விழா; பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்
15வது அமைப்பு தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் நிர்வாகிகள் வேட்பு மனு
ஆவடி தொகுதியில் ரூ.24.5 லட்சத்தில் 13 புதிய மின்மாற்றிகள்; அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்
திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில் யாருக்கும் கொரோனா இல்லை; கல்லூரி முதல்வர் தகவல்
திருத்தணி முருகன் கோயிலில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.2.70 கோடி பணிக்கொடை
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்