ஆப்கானில் பயங்கரம் தலிபான் கமாண்டர், அவரது மகன் உள்பட 6 பேர் சுட்டுக்கொலை
2022-01-20@ 14:27:13

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் கமாண்டர், அவரது மகன் உள்பட 6 பேர் நேற்று சுட்டு கொல்லப்பட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது. கடந்தாண்டுதான் தலிபான் படையினர் மீண்டும் ஆட்சியை பிடித்தனர். பின்னர் பல மாதங்களாகவே அங்கு கடும் பஞ்சம் ஏற்பட்டது. உலக நாடுகளும் தலிபான் அமைப்பை அங்கீகரிக்க தயங்குவதால், ஆப்கன் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிழக்கு குனார் மாகாணத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் தலிபான் கமாண்டர், அவரது மகன் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அங்குள்ள செய்தி நிறுவனம் கூறுகையில், நரங் மாவட்டத்தில் தலிபான் கமாண்டர், அவரது மகன் மற்றும் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டின் உளவுத்துறை அதிகாரிகள், இதை உறுதி செய்து. தனிப்பட்ட விரோதம் காரணமாக மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம்கூட இங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 26 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17ம் தேதி மேற்கு ஹெராத் மாகாணத்தில் உள்ள காசிமி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தலிபான் துணை அமைப்பினர் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் டிரைவர், மற்றும் டாக்டர் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் நடந்த மற்றொரு சம்பவத்தில், மேற்கு காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சியில் தலிபான்களால் நிர்வகிக்கப்படும் சோதனை சாவடியில், ஒரு பெண், அவரது குடும்பத்தாருடன் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார். திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வரும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவரது தந்தை கோரியுள்ளார். இப்படி தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
இலங்கை நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ கோஷத்தால் அதிபர் ஓட்டம்: எதிர்கட்சிகளின் அமளியால் பரபரப்பு
2 நாளில் 24 நிலநடுக்கங்கள்: இன்றும் அந்தமானில் உணரப்பட்டது
அமெரிக்காவின் சுதந்திர தின நிகழ்ச்சி; துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி: மர்ம நபரை பிடித்து விசாரணை
“காளி“ கையில் சிகரெட்.. இந்துக் கடவுளை அவமதிக்கும் ஆவணப்படத்தை திரும்பப் பெறுங்கள்... இந்திய தூதரகம் அதிரடி!!
அமெரிக்காவில் சோகத்தில் முடிந்த சுதந்திர தினம்.. மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி; உடலில் தோட்டா பாய்ந்த 24 பேருக்கு சிகிச்சை!!
அந்தமான் தீவுகளில் 7 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!