ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் 243 பேருக்கு தொற்று
2022-01-20@ 14:19:37

திருமலை: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பண்டிகையொட்டி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை 2நாட்கள் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் 91 பேருக்கும், நேற்று 152 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் விடுமுறை முடிந்து வரக்கூடிய அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 சதவீத பணியாளர்களுடன் ஏற்கனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்த மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட இருந்த ஜி.பி.எஸ். தொழில்நுட்ப செயற்கைக்கோள் மற்றும் ககன்யான் திட்டப்பணிகள் காலதாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, கடந்த வாரம் இஸ்ரோ தலைவராக பதவியேற்ற சோமநாத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் செய்திகள்
தவறுதலாக எல்லை தாண்டிய குழந்தை: பாக். வீரர்களிடம் ஒப்படைப்பு
வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நன்கொடை பெறலாம்: எப்சிஆர்ஏ சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம்
6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்கியது
சுயநலத்துக்காக பயன்படுத்த பார்க்கும் அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் பதில் சொல்லும்: தலைமை நீதிபதி என்வி.ரமணா காட்டம்
பயணிகள் அலறல் 5000 அடி உயரத்தில் விமானத்தில் புகை: 15 நாளில் 5வது சம்பவம்
முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல் மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கிய 80 பேரும் பலி: சடலங்கள் மட்டுமே மீட்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்