யூடியூபில் தேவையற்ற பதிவுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எதுவும் சாத்தியக்கூறு உள்ளதா: உயர்நீதிமன்ற கிளை சரமாரிக் கேள்வி
2022-01-20@ 12:34:36

மதுரை: ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூபும் குற்றவாளிதான் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கூறினார். யூடியூபில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது போன்ற வீடியோக்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. யூடியூபை பார்த்து துப்பாக்கி செய்வது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது என பலர் வாக்குமூலம் தருகின்றனர் என தெரிவித்தார். யூடியூபில் தேவையற்ற பதிவுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியது.
தேவையற்ற பதிவுகளை தடுக்க சாத்தியக்கூறு உள்ளதா என தமிழக அரசு பதிலளிக்க நீதிமதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து தேவையற்ற வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்றால் அதை தடுங்கள் என கூறினார். யூடியூபில் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாமா? யூடியூபுக்கு மொத்தமாக தடை விதிக்கலாமே எனவும் தெரிவித்தார். யூடியூபில் சில நல்ல விசயங்கள் உள்ளன, இருப்பினும் தேவையற்ற பதிவுகள் செய்யப்பட்டால் தடை செய்யலாமே எனவும் அறிவுறுத்தினார்.
தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா? என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கேள்வி எழுப்பினார். யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது, அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளது. சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. யூடியூபில் வரும் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? எனவும் கேட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!!
கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டி
பாதாள சாக்கடை பணிகளால் மீண்டும் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலை: சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம் பேரூராட்சியில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சூனாம்போடு அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சத்தில் நவீன கழிப்பறை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;