5 நாட்களுக்கு பிறகு பெரியபாளையம் பவானியம்மன் கோயில் திறப்பு: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
2022-01-20@ 00:03:36

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா ஆகஸ்ட் மாதம் 16 அல்லது 17ம் தேதி தொடங்கும். இந்த விழா 10 வாரங்கள் நடக்கும். இந்த திருவிழாவுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்பட பல வாகனங்களில் பக்தர்கள் குடும்பத்துடன் வருவார்கள்.
அவர்கள், சனிக்கிழமை இரவு தங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்து, ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக கடந்த 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் (18ம் தேதி) வரை 5 நாட்கள் கோயில் மூடப்பட்டு இருந்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்த பக்தர்கள், கோயிலுக்கு உள்ளே சென்று தரிசனம் செய்ய முடியாததால் கோயில் பின்புறம் உள்ள வேப்பமரத்திலும், புற்று பகுதிகளிலும் அம்மனை வழிபட்டு, தரிசனம் செய்து சென்றனர். இந்நிலையில், 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் நேற்று கோயில் திறக்கப்பட்டது. இதையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில், பக்தர்கள் பவானி அம்மனை தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இதே போன்று பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
மேலும் செய்திகள்
கைது செய்! கைது செய்!: எடப்பாடி பழனிசாமியின் துரோக கூட்டத்தை கைது செய்..ராமநாதபுரத்தில் பன்னீர் ஆதரவாளர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு..!!
சேலம் காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி: ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு விற்பனையால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
தமிழ்நாடு நாள் விழா; பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்
15வது அமைப்பு தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் நிர்வாகிகள் வேட்பு மனு
ஆவடி தொகுதியில் ரூ.24.5 லட்சத்தில் 13 புதிய மின்மாற்றிகள்; அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்
திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில் யாருக்கும் கொரோனா இல்லை; கல்லூரி முதல்வர் தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்