ஈரோடு வியாபாரிகளிடம் 2 கோடி மோசடி வழக்கில் அதிமுக செயலாளர் கைது
2022-01-20@ 00:03:25

ஈரோடு: ஈரோட்டில் வியாபாரிகளிடம் ரூ.2 கோடி நில மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பகுதி செயலாளரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 350 பேரிடம் தலா ரூ.70 ஆயிரம் வீதம் ரூ.2 கோடி வரை வசூல் செய்து மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடந்த மாதம் ஈரோடு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக, மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவரும், அதிமுக மாவட்ட பிரதிநிதியுமான ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்த பி.பி.கே.பழனிச்சாமி, சங்க செயலாளரும், அதிமுக கருங்கல்பாளையம் பகுதி செயலாளருமான ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த முருகசேகர் என்ற முருகநாதன், சங்கத்தின் பொருளாளரும், அதிமுக வார்டு செயலாளருமான ஈரோடு இந்திரா நகரை சேர்ந்த வைரவேல், சங்க துணைத்தலைவரும், அதிமுக வார்டு செயலாளருமான குணசேகரன், துணை செயலாளரும், அதிமுக உறுப்பினருமான ஆறுமுகம், பி.பி.கே.பழனிச்சாமியின் 2வது மனைவி மேகலா, முருகசேகர் மனைவி சாந்தி, குணசேகரன் மனைவி ஜோதிமணி, ஆறுமுகம் மனைவி ரேவதி, வைரவேல் மனைவி ஜெயந்தி, பி.பி.கே.பழனிச்சாமி மகன் வினோத்குமார் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் வைரவேல், வினோத்குமார், ஆறுமுகம் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தலைமறைவான அதிமுக பிரமுகர்களை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த கருங்கல்பாளையம் அதிமுக பகுதி செயலாளரும், சங்கத்தின் செயலாளருமான முருகசேகரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
துறையூர் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை-மர்ம நபர்களுக்கு வலை
வேடசந்தூர் அருகே பரபரப்பு கள்ளக்காதலி வெட்டிக் கொலை
சென்னையில் தீவிர சோதனை குட்கா விற்ற 46 பேர் கைது: 51 கிலோ புகையிலை பறிமுதல்
கள்ளக்காதலுக்கு இடையூறு குழந்தையின் கையை உடைத்த தாய் கைது
அம்பத்தூர் அருகே ஆன்லைன் மூலம் தனியார் கம்பெனி வங்கி கணக்கில் ரூ.1.10 கோடி அபேஸ்: கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர் கைது
கல்லூரி மாணவி கடத்தல்?
மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!